எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடர்பாக வழக்கு - தமிழக அரசு பதில்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லையா ? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது.

Update: 2020-12-18 13:30 GMT
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றக் மதுரைக்கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது என கேள்வி எழுப்பினர்.  

2019ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது எனவும்,

45 மாதத்திற்குள் கட்டடம் கட்டி முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கீடு செய்து பேசிய நீதிபதிகள், அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடம் 8 மாதம் மேலாகிறது, இந்நேரம் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா ? எனவும் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளதாக தெரிவித்தது.
Tags:    

மேலும் செய்திகள்