செல்போன் செயலி மூலம் கடன் வழங்கும் கும்பல் : 7 நாட்களில் ரூ. 3000க்கு, ரூ. 5000 வசூல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செல்போன் செயலிகள் மூலம் கடன் வழங்கும் கும்பல் ஒன்று, அதிக வட்டியுடன் நூதன வசூலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-11 09:08 GMT
தற்போதைய நெருக்கடியான கொரோனா காலத்தில் பணத் தேவையை சமாளிக்க மிக எளிதாக கடன் வழங்குகின்றன, செல்போன் செயலிகள். 

அவை, வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, சூடு வட்டி என்பதை தாண்டி, புதிதாக ஒருவட்டி முறையில் பணத்தை வசூலித்து வருகின்றன. 

பண தேவைக்காக கையை பிசையும் இளைய சமுதாயத்தை இலக்கு வைத்து வலைவிரிக்கும் அந்த ஆன்லைன் வட்டித் தொழில் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

7 நாட்களில் திருப்பி செலுத்தும் நிபந்தனை விதிக்கும் இந்த செல்போன் செயலிகள், சில லட்சம் வரை எளிதில் கடனாக வழங்குகின்றன.

மூவாயிரம் ரூபாய் கடன்பெற்றால், 5 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும். சில விநாடிகள் கூட தாமதம் ஆவதை ஏற்காத ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள், மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், வேறொரு செயலியில், இதேமுறையில் கடனை வாங்கி முன்பு வாங்கிய கடனை அடைக்கின்றனர், சிலர்...

Tags:    

மேலும் செய்திகள்