"கல்வித்துறை பணி நியமனங்களுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு" - பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக்கல்வி துறையில் நடைபெறும் நேரடி பணி நியமனங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு, 40 லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-09 12:32 GMT
பள்ளிக்கல்வி துறையில் நடைபெறும் நேரடி பணி நியமனங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு, 40 லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பிரிவில் உள்ள அனைவருக்கும் நேரடி முறையில் பணி நியமனம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆக இருந்தது. இதை 45 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  அனைத்து பிரிவுகளிலும் விதவைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து நேரடி பணி நியமனங்கள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்