போலி ஆவணம் தயாரித்து மோசடியாக சொத்து விற்பனை - சொத்தை விற்றவர், ஆவணம் தயாரித்த திமுக நிர்வாகி இருவரும் கைது

80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-10-08 06:24 GMT
சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மடிப்பாக்கம் ராம் நகர் 27வது பிரதான சாலையில் நான்காயிரத்து 800 சதுர அடி இடம் வாங்கியுள்ளார். 1983-ல் வாங்கிய இடத்துக்கு, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் பட்டா பெற்றுள்ளார். ஆனால், கடந்த 2019-ல் சொந்த இடத்தை பார்த்தபோது, தமக்கு சொந்தமானது என வேறொருவர் விளம்பரம் வைத்துள்ளார். சிவக்குமார் பெயரில் போலி ஆவணம் தயாரித்த ஒருவர், சரவணகுமார் ஆதிலிங்கம் என்பவர் பெயருக்கு சொத்தை பதிவு செய்து அதை 80 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் அளித்த புகாரின் பேரில், சிவகுமாராக, சரவணகுமார் ஆதிலிங்கம் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதில், மறைமலைநகரைச் சேர்ந்த சரவணகுமார் ஆதிலிங்கம், போலி ஆவணம் தயாரித்த சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரித்திவிராஜ் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிரித்திவிராஜ் சோழிங்கநல்லூர் திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்