பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

Update: 2020-09-19 09:30 GMT
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க  புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன்  சிறப்பாக துவங்கியது. அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி புறப்பாடு திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும் என்றும், அதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது,. அதேபோல் அர்ச்சனை , திருமஞ்சனம் , அமர்வு தரிசனம் போன்ற சிறப்பு நடைமுறைகள் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,. இருந்த போதிலும் மற்ற நேரங்களில் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

புரட்டாசி மாத சனிக்கிழமை தரிசனம்:முத்தங்கி அலங்காரத்தில் பெருமாள் 
- ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவிலில் உற்சவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் விரிவான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்