"லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா?" - நீதிபதிகள் சரமாரி கேள்வி

மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-09-14 14:14 GMT
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இதுவரை மணல் கடத்தல் விவகாரங்களில் எத்தனை வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எத்தனை நபர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு விரிவான
நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்