அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் - அண்ணா பல்கலைக்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது

அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுப்பிய கடிதம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-08 06:42 GMT
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில்  அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைகழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் அரியர்ஸ் மாணவர்களை தேர்வு பெறச் செய்வதை ஏற்க முடியாது எனவும், உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மறுத்து வந்த நிலையில் தற்போது கடிதம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்