தி.மு.க. எம்.பி-எம்.எல்.ஏ க்களை அழைக்க வேண்டும் - அ.தி.மு.க. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

அரசு விழாக்கள் மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-21 11:36 GMT
அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும் எதிர்கட்சியான தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில் திமுக எம்.பி.  செந்தில்குமாரை அனுமதிக்க மறுத்தது ஜனநாயக விரோதம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

இதே போல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் தி.மு.க. எம்.பி., 
எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கு தி.மு.க. எம்.பி., எம்.எல். ஏ.,க்களை அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி , மக்களின் குறைகளை எடுத்துரைத்து  தீர்வு காண  அரசு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்