டாஸ்மாக் வசூல் - ஒரே நாளில் ரூ.248 கோடி
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.;
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை முழு ஊரடங்கு என்பதால் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நேற்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில், 56 கோடியே 45 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 55 கோடியே 77 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது.