வரும் 17ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசு அனுமதி

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-08-14 05:55 GMT
இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை வரும் 17ஆம் தேதி துவங்கவும், பதினோராம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வரும் 24ஆம் தேதி துவங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு காலையில் 20 மாணவர்களுக்கும், பிற்பகலில் 20 மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போல மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ்களை பள்ளிகள் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும், ஓன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர் வர தேவையில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அன்றைய தினமே அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள 25 விழுக்காடு இடங்களை பூர்த்தி செய்வதற்கான மாணவர் சேர்க்கை பணிகளும் வரும் 17 ஆம் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் துவக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்