பல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்

தமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

Update: 2020-08-05 05:27 GMT
தமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை  வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்,  ஆனால், சாப்பிடக்கூட செல்லாமல் பல மணி நேரம் அவர்கள் காந்திருந்த நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் நிவாரண நிதியை வழங்க முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது,  மாற்று திறனாளிகளை வரவழைத்து விட்டு அரசு அதிகாரிகள் செல்போனில் பேசியபடி, மற்ற வேலைகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்