N 95 மாஸ்க் அயல்நாட்டு நிறுவனங்கள் மோசடி - தனியார் மருத்துவமனை உரிமையாளர் புகார்

N-95 முக கவச இறக்குமதியில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக மதுரை மருத்துவர் அளித்த புகார் குறித்து இந்திய தூதரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Update: 2020-08-01 07:21 GMT
வாடிப்பட்டியை சேர்ந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் சந்திரமோகன், நெதர்லாந்து நிறுவனத்திடம் N-95 முககவசம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார். 5 லட்சம் முக கவசங்கள் ஆர்டர் செய்திருந்த நிலையில் முன்பணமாக 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் முக கவசத்தை வழங்காமல் நெதர்லாந்து நிறுவனம் ஏமாற்றி வருவதாக மருத்துவர் சந்திரமோகன் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவை சேர்ந்த பெட்ரிக் வேன் டிக், மேலாளர் டாக்டர் பீட்டர் பாத் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெதர்லாந்து மட்டுமில்லாமல் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் இதேபோன்று மாஸ்க் அனுப்பி வைப்பதாக 90 லட்சம் ரூபாய பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து வரும் இந்திய தூதரகம்,  உரிய  நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்