தங்கநகைக்கடன் வட்டி வீதம் 7 சதவீதமாக குறைப்பு - குறுகிய கால வட்டிக் குறைப்பில் இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கியான, இந்தியன் வங்கி நகை அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது.

Update: 2020-07-26 05:29 GMT
பொதுத்துறை வங்கியான, இந்தியன் வங்கி நகை அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இதற்கு முன் 7 புள்ளி 5 சதவீதமாக இருந்த நகை அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்த வட்டி விகித மாற்றம் குறுகிய காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாய பணிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கவேண்டும் என வட்டி விகிதத்தினை குறைத்துள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது. தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை அடமான கடன் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்