திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு பதவி - சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமனம்

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-25 10:07 GMT
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக, ராஜா அன்பழகன் நியமிக்கப்படுவதாக, செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜெ.அன்பழகனுக்கு பிறகு, மாவட்ட பொறுப்பாளராக, சிற்றரசு நியமிக்கப்படுவார் என தந்தி டிவி முன்பே தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்