பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து - குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2020-07-16 10:17 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த 8 பேர், சென்னைக்கு காரில் பயணம் செய்துள்ளனர். திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சாத்தான்குளம் மேலநடுக்குச்சி சேர்ந்த 26 வயது கார் ஓட்டுனர் கோபாலகிருஷ்ணன், முருகன், முருகராஜ், ஸ்ரீமுருகன், மலர் மற்றும் 7 வயது பெண் குழந்தை ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார், உடல்களை மீட்டனர். மேலும், உயிருக்கு போராடிய 9 வயது முத்துமனிஷா, 6 வயது முத்துஹரிஷ் ஆகிய 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்