Actor Suriya 47 | Nazria Nazim | பூஜை போட்ட சூர்யா - என்னது அவங்க மறுபடி வர போறாங்களா.. எகிறும் ஹைப்

Update: 2025-12-08 02:01 GMT

நடிகர் சூர்யாவின் 47வது படத்திற்கு சென்னையில் பூஜை

நடிகர் சூர்யா நடிக்கும் 47வது புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ரோமன்சம், ஆவேசம் படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்குகிறார். நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழுக்கு திரும்பும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்து வரும் வெங்கி அட்லூரி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாள் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் இந்த புதிய படத்தில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்