Viral Video | திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட பெண் எம்.பிக்கள் - வைரலாகும் வீடியோ
நடிகையும், பாஜக எம்.பி.-யுமான கங்கனா ரனாவத், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தேசியவாத காங்கிரஸின் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் திருமண விழாவில் ஒன்றாக இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பிரபல தொழிலதிபரும், அரசியல்வாதியுமான நவீன் ஜிண்டாலின் இல்ல திருமண விழாவில் பெண் எம்.பி.-க்கள் பாலிவுட்டின் ஓம் சாந்தி ஓம் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.