குட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன்

குட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-03 11:43 GMT
திருவண்ணாமலையில் தனியார் குடோனில் 8 லட்சத்து 40 ஆயிரம் பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளரும், உதவியாளரும்  கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாதவன் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,  சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாயை, 4 வாரத்தில் வழங்க வேண்டும் என, நிபந்தனை விதித்து, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு, 4 வாரத்திற்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்