கர்ப்பிணிகளையும் விட்டுவைக்காத கொரோனா - கர்ப்பிணிகள் பாதிப்பு 1060 ஆக அதிகரிப்பு

சென்னையில், அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனாவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஆளாகி உள்ளனர்.

Update: 2020-06-24 17:24 GMT
ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில், கொரோனாவுக்கு 386 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்றனர். 300 பேர் நலம்பெற்ற நிலையில், 70 பேர் சிகிச்சையில் உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், கொரோனா தொற்றிய கர்ப்பிணிகள் 285 பேர் சிகிச்சைப் பெற்றனர்.  230 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 41 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில், கொரோனா தொற்றுள்ள 248 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பினர். 39 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த150 கர்ப்பிணிகளில்126 பேர் வீடு திரும்பினர். 24 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மொத்த பாதிப்பான ஆயிரத்து 60 பேரில், 850-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பினர்.120க்கும் அதிகமான கர்ப்பிணிகள் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்