மருத்துவ படிப்பு ஓ.பி.சி 27% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2020-06-06 11:38 GMT
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. நடப்பாண்டு முதல் இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்மிதல் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலாராஜேஷ்,  மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான நிலை குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரிவாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விரைவில் அறிக்கை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்