குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

Update: 2020-06-04 10:35 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வைதீஸ்வரன் நகரை சேர்ந்த 35 வயதான நபர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்தாளுனராக பணியாற்றி வருகிறார்.  மே மாதம் மூன்று நாட்கள் வேலை பார்த்து விட்டு, குடியாத்தத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த 7 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 31 ஆம் தேதி  மருத்துவமனைக்கு சம்பளம் பெற சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு  கொரேனா பரிசோதனை நடைபெற்ற நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து குடியாத்தம் திரும்பி உள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாக சென்னை மருத்துவமனையில் இருந்து தொலைபேசியில் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று தொற்று குறித்த தகவலை தெரிவிக்கவே, அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி  வைத்துள்ளனர். இதேபோன்று தாமாகவே தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால், தொற்று பரவலை எளிதாக தடுக்க முடியும் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
Tags:    

மேலும் செய்திகள்