"7-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படாது" -வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசு புதிய உத்தரவு

ஏப்ரல் 7-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படாது என்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-03 16:25 GMT
ஏப்ரல் 7-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படாது என்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 7 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை மட்டுமே நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும், எனவும், ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்