டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் - தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-14 22:25 GMT
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரண பொருள்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து  பேசிய வீடியோ பதிவு  வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமிக்கு எதிராக  சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த  2016 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி செல்வக்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் காலாவதியாகி விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  புதிதாக வாரண்ட் பிறப்பித்து நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்