"குதூகலமாக நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்"

நடைபயிற்சி, ஆனந்த குளியல், சமச்சீர் உணவு என, குதூகலமாக நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Update: 2020-01-29 19:26 GMT
இந்த ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த  மாதம் 15-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. இதில், தமிழக கோவில்களை சேர்ந்த 26 யானைகள், புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு யானைகள் என மொத்தம் 28 யானைகள் கலந்து கொண்டன. இந்த யானைகளுக்கு காலை, மாலை இரண்டு வேளையும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி  நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளியில் மேடை மற்றும் ஷவர் மேடையில் ஆனந்த குளியல் போடும் யானைகள், ஜில்லென்று பாய்ந்துவரும் பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ்கின்றன. பின்னர் அந்த யானைகளுக்கு சமச்சீர் உணவு வழங்கப்படுகின்றன. இப்படி குதூகலமாக பொழுதை கழிக்கும் யானைகள் நலவாழ்வு முகாம், வரும் 31-ம் தேதி நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்