"100 நாள் வேலை திட்டத்தில் ரூ4,204 கோடி மோசடி" - ஆட்சியர் அலுவலகத்தில் 10 ரூபாய் இயக்கம் புகார் மனு

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 204 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

Update: 2020-01-08 02:31 GMT
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவலை கொண்டு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 10 ரூபாய் இயக்கம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கு வராத பல பேரை பணிக்கு வந்ததாக கணக்கு காட்டி மோசடி நடந்துள்ளதாகவும், பல வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு செய்து விட்டு மனிதர்களைக் கொண்டு செய்ததாக கணக்கு காட்டியு​ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது. மேலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் பொருட்களை வாங்கியதாக போலி பில்கள் தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் சமூக தணிக்கையில் சுட்டிக்காட்டி அதனை வசூல் செய்யவதோடு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்