ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

Update: 2019-12-09 07:48 GMT
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 3 ஆயிரத்து 537 ஊரக - உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏராளமானோர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை பெற, 26 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும்
 524 உதவி அலுவலர்கள் மனுக்களை பெற்று வருகின்றனர்.

* திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான இன்று அரசியல் கட்சிகள் அல்லாத சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

* மதுரை தல்லாகுளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டத்தில்13 ஒன்றியங்களிலுள்ள ஊரக ஊராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், காலை முதலே பலரும் ஆர்வமுடன் தாக்கல் செய்தனர்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியம் மற்றும் 497 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்