"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2019-10-15 10:39 GMT
நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, சென்னை எம்.ஜி.ஆர், நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அங்கு மரக்கன்றை நட்டு வைத்த அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவேக், நடிகர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி, பிரபலங்கள் அனைவரும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்