விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு - நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்

விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை, கடலூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-03 21:43 GMT
விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை, கடலூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான உத்தரவை அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி, ஆரணி,  விழுப்புரம்  மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், எனவே விழுப்புரம் அலுவலகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்