ராதாபுரம் : ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு - மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்த ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வளவன் ஆகியோர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2019-07-11 03:09 GMT
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்த ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வளவன் ஆகியோர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அந்த பள்ளி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு மாணவர்கள் வகுப்புக்கு திரும்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்