திருத்தணி அருகே வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகமாத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சமையலறை பழுதாகிய நிலையில், அதனை அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.;

Update: 2019-06-11 12:13 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகமாத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சமையலறை பழுதாகிய நிலையில், அதனை அதிகாரிகள்  புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி திறக்கப்பட்டதால், தற்போது,  வகுப்பறையிலேயே சமையல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  நூலகத்தின் அருகில் அமரவைக்கப் பட்டு  பாடம் நடத்தப்பட்டு வருகிறது.  இதனால் பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.  தமிழக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் நிலையில், விரைந்து சமையலறை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்