கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.;
மதுரையை வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருவதால் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும், இதனைஅவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.