"வீடு கடன், வட்டி, அபராத வட்டியும் தள்ளுபடி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறு, குறு விசைத்தறியாளர்கள் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்பு பெற்ற மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2019-05-15 01:51 GMT
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூரில் நேற்று நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர், இனி எந்தக் காலத்திலும் தலைவருடைய பிள்ளை ஆட்சிக்கு வர முடியாது என்றும், தொண்டன் தான் ஆட்சிக்கு வர முடியும் என்றும் தெரிவித்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், சிறு, குறு விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார். அதேபோல், வீடு கட்ட பெற்ற கடன், வட்டி, அபராத வட்டி ஆகியவையும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்