கஜா புயல் நிவாரணம் கேட்டு போராடிய 140 பேர் மீதான வழக்கு

கஜா புயல் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2019-05-10 10:57 GMT
கடந்த 2017ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உள்ள  தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள்  கஜா புயலால் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறை  தடியடி நடத்தி 140 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. வேதாரண்யம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள  இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனுவை  விசாரித்த நீதிபதி இளந்திரையன், நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு  தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்