9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறை பணியிட மாறுதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-25 10:28 GMT
விளமலில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், உயர் நீதிமன்ற உத்திரவுப்படி இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும், சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும், விற்பனை அடிப்படையில், கடை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9  அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்