பொள்ளாச்சி வழக்கு : படங்கள், வீடியோக்களை 9488442993 என்ற எண்ணிற்கு அனுப்ப சிபிசிஐடி அறிவுறுத்தல்

பொள்ளாச்சி வழக்கு குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-03-14 11:12 GMT
இது குறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாலியல் வழக்கு குறித்து ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் தெரிந்தால் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படங்கள் மற்றும் வீடியோக்களை 9488442993 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு குறித்து புகைப்படங்கள் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்