தேர்தல் பிரச்சாரம் : நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசார கூட்டத்திற்கு வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வர தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-14 10:41 GMT
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிளக்ஸ், கட் அவுட், பேனர்கள் வைக்க நீதிபதிகள் தடை விதித்தனர். தேர்தலின் போது அரசியல் கட்சியினர் பிரச்சார பொதுகூட்டத்திற்கு லாரி, வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வரவும் நீதிபதிகள்  தடை விதித்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்