தொலைபேசியில் முத்தலாக் அளித்த கணவன் : மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பரக்கத் பானு என்பவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2019-02-05 06:17 GMT
தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பரக்கத் பானு என்பவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரது மனுவில், திண்டுக்கலை சேர்ந்த முஹம்மது யூசுஃப் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு  தம்மை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும், தற்போது  ஒன்றரை வயதில் குழந்தை இருக்கும் நிலையில், வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதுடன், தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு திருமணத்துக்கு முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்