தூத்துக்குடியில் திருட்டு போன 100 சவரன் நகை விவகாரம் - திடீர் ட்விஸ்ட்

Update: 2024-05-19 12:54 GMT

தூத்துக்குடி சின்னமணி நகரில் முன்னாள் துணைவேந்தர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாகை மீன்வள பல்கலை துணைவேந்தராக பணி புரிந்து ஓய்வுபெற்ற சுகுமார் என்பவரது வீட்டில் 2 பீரோவின் லாக்கர்களையும் உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தகவலறிந்து சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த சுகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 100 பவுன் நகைகள் வேறொரிடத்தில் இருந்ததால் திருடு போகவில்லை என்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருள்கள்தான் திருடு போயுள்ளது என்றும் சுகுமார் தெரிவித்துள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்