பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Update: 2019-01-08 02:09 GMT
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டிருப்பதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார்.

அதேபோல, தனக்கு கிண்டியில் வழங்கப்பட்ட அலுவலகத்தை பயன்படுத்த முடியாமல் நடுத்தெருவில் நிற்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு முற்றிலும் மீறியுள்ளதாக சாடினர்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்