தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நாசமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.;

Update: 2018-12-25 10:15 GMT
திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை, சுவாமிமல்லம்பட்டி, செங்கப்படை, உலகாணி, நேசநேரி, விடத்தகுளம் உள்ளிட்ட  கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு வரவில்லை. மேலஉரப்பனூர் வழியாக இப்பகுதிக்கு வரும் தண்ணீர், கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வரவில்லை எனவும், இதனை நம்பி பயிரிட்ட நெற்பயிர் காய்ந்து கருகி விட்டது எனவும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்