குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்ககத்தில் ரூ.4 கோடி முறைகேடு புகார் - 2 வாரத்தில் விசாரித்து முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்கக திட்ட அதிகாரி மீதான 4 கோடி ரூபாய் நிதி முறைகேடு புகாரை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-02 01:23 GMT
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்கக திட்ட அதிகாரி மீதான 4 கோடி ரூபாய் நிதி முறைகேடு புகாரை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்ககத்தில் திட்ட அதிகாரியாக பணியாற்றிய சஹானா பேகம், தனக்கு  நிதித்துறை கூடுதல் செயலாளர் அனுப்பிய சார்ஜ் மெமோ ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி விமலா விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சஹானா மீதான  குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்