வெயிலில் காக்க வைக்கப்பட்ட மாணவர்கள் - பேரணியில் பங்கேற்ற தியாகிக்கு அவமரியாதை

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வருகைக்காக பள்ளி மாணவர்கள் சுமார் 2 மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர்.

Update: 2018-11-28 18:55 GMT
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். குறிப்பிட்ட நேரம் கடந்து சுமார் 2 மணி நேரம் குடிநீர் கூட வழங்கப்படாமல் மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகி மாசிலாமணி அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சேலம் ஆட்சியர் ரோகிணியின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்