எழும்பூர் மருத்துவமனையில் பிறந்த சிசுவிற்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வசதி - எடப்பாடி பழனிசாமி

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.

Update: 2018-11-14 08:30 GMT
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நவீன மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமைசர் விஜயபாஸ்கர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நவீன மருத்துவ வசதிகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்