சென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-11-13 21:18 GMT
சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் கொடுங்கையூரை சேர்ந்த கிஷோர், சதீஷ், ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்