வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனம் மற்றும் மின்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-01 19:50 GMT
வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனம் மற்றும் மின்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த எஸ்.மனோஜ் இமானுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் மின் கம்பியில் உரசி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், இதுகுறித்து வனத்துறை முதன்மை செயலர், தமிழக மின்வாரிய தலைவருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும், மேகமலையில் சமீபத்தில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்