"கல்வியில், பிரதமரின் கனவை நனவாக்குவோம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

கல்வித்துறையில் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை, தமிழக அரசு நனவாக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

Update: 2018-09-04 16:41 GMT
கல்வித்துறையில் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை, தமிழக அரசு நனவாக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான " பரீட்சைக்கு பயமேன்" என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை - ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் இந்த நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு தாயை போல, பிரதமர் மோடி, இந்த நூலை உருவாக்கி உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.  

" பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி " -  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

பள்ளி கல்வித்துறைக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்
கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்