சுவரை உடைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் விழுந்த கண்டெய்னர் லாரி : ஓட்டுநர் உயிரிழப்பு
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 02:37 PM
கோவையில் இருந்து கொரியர் பார்சல்களை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று ஈரோடு பவானி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மதில் சுவரை உடைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர், மீனவர்கள் உட்பட பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் உதவியோடு சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சிவகுமார் உயிரிழந்த நிலையில் லாரியின் உள்ளே இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.