கோவையில் ரத்து​ செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை கண்டுபிடிக்க புதிய செயலி

6 குற்றங்களில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அரசு உத்தரவு

Update: 2018-07-12 08:27 GMT
கோவையில் மோட்டார் வாகன விதி​மீறல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுகுடித்துவிட்டு வாகன​ங்கள் இயக்குவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, தலைக் கவசம் அணியாமல் வாகனம் இயக்குவது உள்ளிட்ட ஆறு விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய செயலி ஒன்றும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. விதியை மீறும் வாகன ஓட்டிகள் 13 ஆயிரத்து 351 பேரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6 ஆயிரத்து 578 பேரின் ஓட்டுநர் உரிமங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது போக்குவரத்து போலீஸாருக்கும், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும் நிலையில், ஓட்டுநர் உரிம நகலுடன் வாகனத்தை இயக்குபவர்கள் இந்த செயலின் மூலம், போக்குவரத்து போலீசாரிடம் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியாமல், வாகனங்களை இயக்குவதும் குற்றம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்