விளையாட்டு வீர‌ர்களுக்கு தேசிய விருது - குடியரசு தலைவர் வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கு, தேசிய விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Update: 2021-11-13 20:35 GMT
தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீராஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ்,ஹாக்கி வீரர்கள் மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ், கால்பந்து வீரர் சுனில் சேத்திரி உள்ளிட்டோருக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னா வழங்கப்பட்டது.இதேபோல் பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மணீஷ் நர்வால், அவானி லெஹரா உட்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருதுகளை வழங்கி  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.இதேபோல் ஹாக்கி வீராங்கனைகள் மோனிகா வந்தனா கட்டாரியா, கிரிக்கெட் வீர‌ர் ஹிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜூனா விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் கவுரவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்