டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - பந்து வீச்சாளர் தர வரிசையில் பும்ரா மூன்றாமிடம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Update: 2019-09-04 03:43 GMT
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய  வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித், கோலியை விட ஒரு புள்ளி  அதிகம் பெற்று 904 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். கோலி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் , இந்திய வீரர் புஜாரா அடுத்த அடுத்த இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 3 வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்